கட்டாரில் இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவது தொடர்பில் பேச்சுவார்த்தை முன்னெடுப்பு!

41 0

இலங்கையர்களுக்கான புதிய தொழில் வாய்ப்புகள் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கட்டார் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

கட்டார் நாட்டுக்கான விஜயத்தின் போது அந்நாட்டு தொழிலாளர் அமைச்சர் கலாநிதி அலி பின் சயீட் பின் ஸ்மைக் அல் மர்ரியை அமைச்சர் விஜேசேகர சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, ​​எதிர்வரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தின் போது இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புகள் மற்றும் விசா நடைமுறை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

எரிசக்தி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக எரிபொருளை இறக்குமதி செய்வது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடுவதற்காக இலங்கையின் பிரதிநிதிகள் குழு ஒன்று தற்போது கட்டாருக்கு சென்றுள்ளது.