பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தல்

111 0

அனைத்து வர்த்தகப் பொருட்களின் பொதிகளிலும், விலை, நிறை உள்ளிட்ட மேலும் தகவல்கள் சிலவற்றை உள்ளடக்குவதை கட்டாப்படுத்தி பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நுகர்வோர் சில்லரை விலைக்கு பெறும் அனைத்து பொருட்களின் பொதியிலும், அதிகபட்ச சில்லறை விலை, நிறை அல்லது அளவு, உற்பத்தி திகதி மற்றும் பொதியிடல் திகதி , காலாவதியாகும் திகதி, உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி, இறக்குமதி செய்யப்பட்ட பொருள் என்றால் உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி ஆகியவை அச்சிடப்பட்டு அல்லது அகற்ற முடியாதவாறு பொதியில் குறிப்பிடப்பட்டிருந்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனை விடுத்து எந்தவொரு வர்த்தக பொருட்களையும் இறக்குமதி, உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல், பொதியிடல், விற்பனை செய்தல் அல்லது காட்சிப்படுத்தல் கூடாது என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தனது வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டியுள்ளது.