பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ; ஒருவர் பலி

245 0

கண்டி மாவட்டத்தில் ஹுன்னஸ்கிரிய லுல்வத்த பகுதியில் மீமுரே நோக்கிச் சென்ற பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.