திருவள்ளூர் நகராட்சி பெரியகுப்பம் ரெயில்வே குடியிருப்பில் வசிப்பவர் நாகம்மாள் (70). வீட்டின் பின்புறமாக உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். மற்றொரு சம்பவம்… திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம் ஆயில் மில் அருகில் தனியார் திருமண மண்டபம் அருகில் உள்ள பேக்கரியில் இரவு பூட்டை உடைத்து கடையில் உள்ள டி.வி. மற்றும் லேப்டாப் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் காலையில் கடையை திறக்க வந்த உரிமையாளர், திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

