காஷ்மீர் விவகாரம் தீராத பிரச்னையாக உள்ளது: நவாஸ் ஷெரீப்

325 0

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே, காஷ்மீர் விவகாரம் தான் முக்கிய பிரச்னையாக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அரசானது  காஷ்மீர் ஒற்றுமை தினம் என்ற பெயரில் விழாவை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அந்நாட்டு பிரதமர்  நவாஸ் செரீப் கலந்து கொண்டார்.
விழாவில் பங்கேற்று பேசிய அவர்,” இந்தியா – பாகிஸ்தான் இடையே பிரிவினை ஏற்பட்ட பின்னர் காஷ்மீர் விவகாரம்  பெரிய பிரச்னையாகவும், ஐ.நா. சபையின்  மிகப்பழைய பிரச்னையாக உள்ளது. கடந்த பல நூற்றாண்டுகளாக, சர்வதேச சமூகத்திற்கு உறுதிமொழி அளித்தபடி, காஷ்மீர் மக்களுக்கு சுய அதிகாரத்தை வழங்க இந்தியா மறுத்து வருகிறது.
தார்மீகம், தூதரக மற்றும் அரசியல் ரீதியில் பாகிஸ்தான் மக்கள் தங்களது ஆதரவை காஷ்மீர் மக்களுக்கு அளித்து வருகின்றனர். இந்திய பாதுகாப்பு படையினரால், பொது மக்கள் துன்புறுத்தி கொல்லப்படுவதற்கு பாகிஸ்தான் தனது கண்டனத்தை தெரிவித்து
கொள்கிறது” என அவர் பேசினார்.