சட்ட விரோதமாக நேபால எல்லைக்குள் நுழைந்ததாக வங்க தேசத்தை சேர்ந்த 37 பேர் கைது

324 0

நேபால எல்லைக்குள் அத்துமீறி சட்ட விரோதமாக நுழைந்த காரணத்திற்காக வங்காள தேசத்தை சேர்ந்த 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்காள தேசத்தை சேர்ந்த 37 பேரை நேபால காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர். நேபால் எல்லைக்குள் சட்ட விரோதமாக அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்தியா வழியாக காத்மண்டுவின் முக்கிய சுற்றுலா தளமான தாமெல் பகுதியை அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேபாலத்தில் கைது செய்யப்பட்டுள்ள வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள் யாரிடமும் பாஸ்போர்ட் மற்றும் நேபாலத்தில் தங்குவதற்கு ஏற்ற சட்டப் பூர்வமான தரவுகள் எதையும் வைத்திருக்கவில்லை என காத்மாண்டு காவல் துறை தெரிவித்துள்ளது.

நேபாலத்தில் கைது செய்யப்பட்டோர் இந்தியா வழியாக நேபால எல்லைக்குள் நுழைந்த வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தையல் தொழில் செய்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் 19-34 வயதுடையவர்கள் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் நேபால நாட்டின் குடியுரிமை மூலம் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றவே இவ்வாறு செய்கின்றனர் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். முழுமையான விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்டவர்கள் வெளியேற்றப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.