தம்மிக்க பெரேராவின் நியமனத்திற்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு

116 0

பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக வர்த்தகர் தம்மிக்க பெரேராவை நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்களை நிராகரிக்க உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு இன்று தீர்மானித்துள்ளது.

இந்த மனுக்கள் இன்று இரண்டாவது நாளாக நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, யசந்த கோதாகொட மற்றும் அனில் ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மூவரடங்கிய நீதியரசர்கள் குழுவின் பின்னர் தனது தீர்மானத்தை அறிவித்த நீதியரசர் பிரியந்த ஜயவர்தன, உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழு இணக்கத்துடன் அனைத்து மனுக்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார்.