ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் இலங்கையில் அவசரகால செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, கொழும்பில் வசதி குறைந்த பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிகளுக்கான உணவு பற்றுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு ஆரம்பித்துள்ளது.
இலங்கையின் எதிர்பாராத பொருளாதார நெருக்கடியின் காரணமாக உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத மிகவும் ; பாதிக்கப்படக் கூடிய மூன்று மில்லியன் மக்களுக்கு உயிர்காக்கும் உணவு, பணம் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான பற்றுச்சீட்டு உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
மாதாந்தம் 15,000 ரூபா பெறுமதியானது பற்றுச்சீட்டுகள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதுடன், 2,000 இற்கும் மேற்பட்ட பெண்களுக்கு தேவையான உணவை வாங்குவதற்கு உதவும் வகையில் இச்செயற்றிட்ட முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதாரப் பிரிவினால் வழங்கப்படும் பிறப்புக்கு முந்தைய பராமரிப்புடன் இணைந்து இவ்வுதவி வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது .
கொழும்பில் உணவு தொடர்பான பணவீக்கம் மே மாதத்தில் 57.4 சதவீதமாக உயர்ந்துள்ளதுடன், சமையல் மற்றும் போக்குவரத்துக்கான எரிபொருளின் பரவலான தட்டுப்பாட்டினால் ஏழைக் குடும்பங்கள் ; உணவுப் பொருட்களை வாங்குவதற்கு இயலாமல் சிரமப்படுகின்றனர் .
ஏறக்குறைய 5 மில்லியன் மக்கள், அதாவது இலங்கையின் சனத்தொகையில் 22 சதவீதமானவர்கள் உணவுப் பாதுகாப்பற்றவர்களாகவும் உதவி தேவைப்படுபவர்களாகவும் உள்ளனர்.
ஊட்டச்சத்தான உணவுகளான மரக்கறி, பழங்கள் மற்றும் புரதச் சத்து நிறைந்த பொருட்கள் இப்போது பல வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு கிடைக்காத நிலை ; உள்ளது .
86 சதவீத குடும்பங்கள் குறைந்தபட்சம் ஒரு சமாளிக்கும் பொறிமுறையைப் பயன்படுத்துகின்றன, ; இதில் பகுதி அளவைக் கட்டுப்படுத்துவது, குறைவான சத்தான உணவை உண்பது மற்றும் உணவைத் தவிர்ப்பது ஆகியவை அடங்கும் என்று அண்மைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
கர்ப்பிணி தாய்மார்கள் ஒவ்வொரு நாளும் சத்தான உணவை உண்ண வேண்டும், ஆனால் ஏழைகள் அடிப்படை பொருட்களை வாங்குவது மிகக் கடினமாக இருக்கிறது. அவர்கள் உணவைத் தவிர்க்கும்போது அவர்கள் தங்களையும், தமது பிள்ளைகளின் ஆரோக்கியத்தையும் ஆபத்தில் தள்ளுகிறார்கள் ; என ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான கொழும்பில் உள்ள உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்தின் துணைப் பிராந்திய பணிப்பாளர் அன்தெயா வெப் கூறினார்.
;நகரங்களில் உள்ள ஏழைக் குடும்பங்கள் மற்றும் தோட்டங்களில் வேலை செய்பவர்களுக்கு தங்கள் வருமானம் குறைந்துள்ள அதேவேளை சந்தை விலைகள் உயர்ந்துள்ளன. கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் உலகளவில் உணவுப் பொருட்களின் மற்றும் எரிபொருளின் விலைகள் அதிகரிப்பைக் காண்கிறது ; எனவே உடனடியாக செயல்பட வேண்டியது அவசியம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
நீண்டகாலமாக இலங்கை அரசாங்கத்தின் தேசிய ஊட்டச்சத்து திட்டங்களுக்கு உலக உணவு நிகழ்ச்சித்திட்டம் ஆதரவளித்து ; வருகின்றது. ஆனால், அவை பொருளாதார நெருக்கடியால் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன தற்போதுள்ள, சமூகப் பாதுகாப்பு வலைத்திட்டங்களை வலுப்படுத்துவதற்கு, WFPஇன் அவசரகால பதில் திட்டம் தேசிய பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் ஒரு மில்லியன் குழந்தைகளுக்கும், மக்கள் ; பங்குபற்றும் ஊட்டச்சத்துள்ள உணவை வழங்கும் திரிபோஷ திட்டத்தில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கும் மற்றும் ஒரு மில்லியன் மக்களுக்கு உணவு, பணம், அல்லது வவுச்சர்கள ஊடாக உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்தின் பதில் மனிதாபிமான தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் திட்டத்தின் ஒரு பகுதியாக ஜூன் 9ஆம் அன்று இலங்கையில் ஐ.நாவினால் உதவிகளை வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது ஜூன் முதல் செப்டம்பர் வரை 1.7 மில்லியன் ; மக்களுக்கு உயிர் காக்கும் உதவியை வழங்குவதற்காக 47 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவையெனக் கோரியது.
உணவு மற்றும் ஊட்டச்சத்து தேவைகள் செப்டெம்பருக்கு அப்பால் தொடரும் என்ற கரிசனையின் அடிப்படையில், ஜூன் முதல் டிசம்பர் 2022 வரை 3 மில்லியன் மக்களுக்கு உதவ 60மில்லியன் அமெரிக்க ; டொலர்கள் தேவைப்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
உலக உணவு நிகழ்ச்சித்திட்டம் இலங்கையில் முன்னெடுக்கும் திட்டத்திற்கான நன்கொடையாளர்களாக அவுஸ்திரேலியா, கனடா, சீனா ; டென்மார்க், ஜப்பான், கொரியா, மடகஸ்கார், ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஐக்கிய நாடுகளின் சமாதானத்தை ; கட்டியெழுப்பும் நிதியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளடங்குகின்றன.

