மட்டக்களப்பு தாண்டவன்வெளி சந்தியில் எரிபொருள் கோரி மட்டக்களப்பு – கொழும்பு வீதியை மறித்து ஞாயிற்றுக்கிழமை (19) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை பொலிஸார் அங்கிருந்து துரத்தி வெளியேற்றினர்.
இதனை தொடர்ந்து குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் இல்லை எனவும், பெற்றோல் வராது எனவும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் வரிசையில் காத்திருந்த மக்களிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து, வரிசையில் காத்திருந்த மக்கள் வீதியின் சிக்கல் சந்தியை மறித்து வாகனங்கள் செல்லவிடாது பெற்றோல் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, போக்குவரத்து தடைப்பட்டதுடன் பதற்ற நிலை ஏற்பட்டது.

இந்த பதற்ற நிலையினைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு மட்டு. தலைமையக பொலிஸ் பெறுப்பதிகாரி பி.கே.ஹொட்டியாராச்சியின் தலைமையிலான, பொலிஸார் சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பெற்றோல் இன்று குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு வரமாட்டாது எனவே மக்கள் வீதியை விட்டு விலகி வீடுகளுக்கு செல்லுமாறு கோரினார்.
மேலும், அதனையும் பொருட்படுத்தாது வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து பொலிஸார் கலைத்து ஆர்ப்பாட்டகாராரை வெளியேற்றினர்.

