போதைப்பொருள் பாவனை அதிகரிப்புக்கு அரசாங்கமே காரணம்

327 0

kardinaal-5646554625சிறீலங்காவின் அரசியல் கட்டமைப்பு மற்றும் நீதித் துறையின் பலவீனமான கட்டமைப்பின் காரணமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளதுடன், இதற்கு அரசாங்கமே காரணம் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதுபோதை எனும் காலனிடமிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 30ஆம் திகதி கம்பகா – ராகம பிரதேசத்தில் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரச்சாரம் ஒன்று நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று(புதன்கிழமை) மாலை கொழும்பிலுள்ள கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் இருப்பிடத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரஞ்சித் மெல்கம் ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டில் அரசாங்கங்கள் அடிக்கடி மாறும் சந்தர்ப்பங்களில் சட்டதிட்டங்களிலும், அரசியலமைப்பிலும் மாற்றங்கள் ஏற்படுவதால் ஜனநாயகமும், நீதித்துறையும் பலவீனமடைந்து போகின்றது.

இதன்காரணமாக, சிறீலங்காவுக்குள் கொண்டுவரப்படுகின்ற போதைப்பொருட்கள் அதிகரித்துக்கொண்டுசெல்வதாகவும், இதனால் நாட்டின் இளஞ் சமுதாயம் அழிந்துகொண்டு செல்வதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.