கல்வி அமைச்சின் அதிரடி தீர்மானம்

232 0

மேல் மாகாணத்தின் கொழும்பு வலயம் மற்றும் அண்மை நகரங்களில் உள்ள பாடசாலைகள், ஏனைய மாகாணங்களின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகள் என்பவற்றின் நடவடிக்கைகளை அடுத்த வாரம் நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பிரதான நகரங்கள் இல்லாத பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு மேல் மாகாணம் உட்பட சகல மாகாணங்களிலும் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது