எரிபொருள் நெருக்கடியால் நாடு முடங்கும் ஆபத்து – தொழிற்சங்கம்

126 0

தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக  நாடு முடங்கும்   ஆபத்து உருவாகியுள்ளதாக கல்விசார தொழிலாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.தற்போதைய நெருக்கடிகளிற்கு மத்தியில் அரசாங்க ஊழியர்கள் வேலைக்கு செல்வதில் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் என தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் அஜித்திலகரட்ண தெரிவித்துள்ளார்.

இலங்கையிடம்  6000 மெட்ரிக்தொன்  எரிபொருளே உள்ளது அடுத்த கப்பல் எப்போது வரும் என தெரியாத நிலை காணப்படுகின்றது,என தெரிவித்துள்ள அவர் எரிபொருள் நெருக்கடி காரணமாக பொதுமக்கள்; நாளாந்த பணிகளை செய்யமுடியாத நிலையில் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்திற்கு தீர்வை காணாவிட்டால் நாடு தானாக முடங்கும் இந்த முடக்கல் அரசாங்கம் திட்டமிட்டதாக காணப்படாது மாறாக குறுகியநோக்கம் கொண்ட கொள்கைகள் காரணமாக தற்போது காணப்படும் பிரச்சினைகளை மக்களால் எதிர்கொள்ளமுடியாததால் உருவானதாக காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.