இலங்கையில் பெருமளவு மக்கள் தங்கள் நாளாந்த உணவை குறைத்துக்கொண்டுள்ளனர்- உலக உணவு திட்டம்

141 0

இலங்கையில் பெருமளவு மக்கள் தங்கள் நாளாந்த உணவை குறைத்துக்கொண்டுள்ளமை ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட மக்களில் 66 வீதமானவர்கள் தங்கள் நாளாந்த உணவை குறைத்துக்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது என உலக உணவுதிட்டம் தெரிவித்துள்ளது.

ஏப்பிரல் மாதத்தி; உலக உணவுதிட்டம் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து உணவு பாதுகாப்பு மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளது.

17 மாவட்டங்களில் மிகவும் வறிய நிலையில் உள்ள வீடுகளை ஆய்விற்கு உட்படுத்தியவேளை 86 வீதமானவர்கள் மலிவான சத்துக்குறைந்த(95) கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளமை தெரியவந்துள்ளதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 83 வீதமானவர்கள் உணவின் அளவை  குறைக்க ஆரம்பித்துள்ளனர் 66 வீதமானவர்கள் நாளாந்தம் உண்ணும் உணவின் எண்ணிக்கையை குறைக்க ஆரம்பித்துள்ளனர் எனவும் உலக உணவுதிட்டம் தனது ஆய்வு குறித்து தெரிவித்துள்ளது.

இலங்கையில் 5.7 மில்லியன் மக்களிற்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகிளன்றன 4.9 மில்லியன் மக்கள் உணவுப்பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்,ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் மனிதாபிமான மற்றும் முன்னுரிமை திட்டம் 1.7 மில்லியன்மக்களை இலக்குவைத்துள்ளது எனவும் ஐநாவின் அமைப்பு தெரிவித்துள்ளது.