தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் குடும்பத்தை சந்தித்தார் அவுஸ்திரேலிய பிரதமர்

33 0

இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் குடும்பத்தினை  அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் இன்று சந்தித்துள்ளார்.

குயின்ஸ்லாந்தி;ற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கிளாட்ஸ்டோனில் நடேசலிங்கம் குடும்பத்தினை சந்தித்துள்ளார்.

நடேசலிங்கம் குடும்பத்தினர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர் அவர்களிற்கு நிரந்தர வதிவிடம் விரைவில் கிடைக்கும் என பிரதமர் உறுதியளித்தார் என தமிழ் குடும்பத்தின் நண்பரான அஞ்செலா பிரெட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் மகி;ழ்ச்சியான நாட்கள் வரவுள்ளன என்பதை அறிந்து இன்று நாங்கள் உண்மையாகவே நம்பிக்கையுடன் காணப்படுகின்றோம்என குறிப்பிட்டுள்ள அவர் ; பிரதமருடன் உரையாட எங்களிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியாதநிலையில் காணப்பட்டோம்இஆனால் பிரியாவும் நடேசும் தங்கள் நன்றியை தெரிவிப்பது மிகவும் அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமரை அவர்கள் கட்டித்தழுவுவதை பார்ப்பது மிகவும் உணர்ச்சிவசப்படவைத்தது தீர்வு வந்துகொண்டிருக்கின்றது என பிரதமர் உறுதியளித்தார் எனவும் அஞ்செலா பிரெட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.