“எனது உயிருக்கு அச்சுறுத்தல்”

238 0

நான் எமது நாட்டு மக்களுக்காகவே குரல் கொடுக்கிறேன் வன்முறை அரசியலுக்கு அல்ல, பிரதமர் இதற்குரிய தெளிவூட்டலை வழங்க வேண்டும், என்மீதான தங்களின் பிழையான புரிதல் எனது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் மீது கட்டுக்கடங்காத கும்பல் தாக்குதல் நடத்தியதை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தனது உரையில் அங்கீகரித்ததாக பிரதமர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான கருத்தை வெளியிட்டதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இந்த வார இறுதிக்குள் கருத்தை மீள பெற வேண்டும் எனவும் பிரதமர் அறிவித்திருந்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்திற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், தனது முந்தைய உரை குறித்து விளக்கக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.