கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

270 0

கல்தொட்ட, கூரகல ரஜமஹா விகாரை வளாகத்தில் கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில் இருந்து சுமார் 20 அடி உயரத்தில் இருந்து குறித்த நபர் கீழே விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கல்தொட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.