நகர்ப்புற காணிகளை பண்படுத்தும் அரச வேலைத்திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 782 ஏக்கர் பரப்பளவு காணி, விவசாய நிலமாக இனங்காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இந்தக் காணிகளில் பயிர்ச் செய்கையை உடனடியாக ஆரம்பிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உரிய பணிப்புரை விடுத்துள்ளார்.
இவ்விடயம் குறித்த அவர் மேலும் கூறுகையில்,
“இந்த காணிகள் நாட்டின் சகல மாவட்டங்களைக் கொண்டதாக வும், அவை 1 ஏக்கர் முதல் 400 ஏக்கர் வரையான பரப்பளவைக் கொண்டுள்ளதாகவும் அமைந்துள்ளன.
அந்த நிலங்களில் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் உரிய பயிர்களை இனங்கண்டு பயிரிடுவதற்கு உத்தேசித்துள்ளோம்” என்றார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் அதன் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்திருந்தார்.

