பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து பஷில் இராஜிநாமா

138 0

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இராஜிநாமா செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சற்று முன்னர் பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார்.

கடந்த 2021 ஜூலை 8 ஆம் திகதி பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்த நிலையில், பின்னர் நிதி அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியையடுத்து நிதியமைச்சர் பதவியிலிருந்து பசில் ராஜபக்ஷ விலகியிருந்தார்.

இந்நிலையில், தற்போது அவர் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளார்.

அவரது தீர்மானத்தை தெளிவுபடுத்தும் வகையில் இன்று பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் பசில் ராஜபக்ஷ விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளார்.