மே மாதம் 9ஆம் திகதி கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம என்பவற்றின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரான சனத் நிசாந்தவின் விளக்கமறியல் இந்த மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மொரட்டுவ நகர சபையின் மேயர் சமன்லால் பெர்ணான்டோ, டான் பிரசாத் உள்ளிட்ட நால்வரையும் இந்த மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றசாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக உள்ளிட்ட 12 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

