குளவிக் கொட்டுக்கு இலக்காகி முதியவர் பலி

304 0

யாழ்.பருத்தித்துறை – சக்கோட்டை பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குளவிக் கொட்டுக்கு இலக்காகி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே குறித்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

இதில், அப்பகுதியைச் சேர்ந்த சூசைப்பிள்ளை சகாயராசா (வயது64) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த முதியவர் நேற்றைய தினம் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது குளவிகள் இவரை கொட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.