அறிவார்ந்த இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர் – சஜித்

57 0

நாட்டை விட்டு அறிவார்ந்த இளைஞர்கள் வெளியேறி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் பாதை வரைப்படம் என்பன உரிய நேரத்தில் அமுல்படுத்தப்படாவிடில், நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும் அதற்கு புதிய ஆணையுடன் நிலையான அரசாங்கம் தேவை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.