பொதுத் தேர்தல் ஊடாகவே பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு- அநுர

340 0

பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதன் ஊடாகவே, நாட்டின் அரசியல்- பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வினைக் காண முடியும் என்று ஜே.வி.பி.யின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கடவத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “கொழும்பு துறைமுக நகரங்கள் 45ஐ செய்யும் அளவுக்கு நாட்டில் கடன்சுமை ஏற்பட்டுள்ளது. எடுத்தக்கடனுக்கான வட்டியையும் நாம் செலுத்த வேண்டும்.

இதற்காக மேலும் கடனைப்பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இவையணைத்துக்கும் டொலர் அவசியமாகும்.

அரசாங்கம் இன்று அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்தியுள்ளது.
இந்தப் பிரச்சினை பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்தி, ரணிலைக் கொண்டுவந்தால் மட்டும். தீர்ந்துவிடப் போகின்றதா?

இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க பொதுத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.
ரணிலுக்கு நாடாளுமன்றிலும் சரி, வெளியிலும் சரி பலம் கிடையாது. ஆவர் ஒரு தனி நபராவார்.

ஆனால், ராஜபக்ஷக்களைப் பாதுகாக்க அவர் சிறந்தவர். ரணில் விக்ரமசிங்கவினால்தான் ராஜபக்ஷக்கள் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அவரை பிரதமராக நியமிக்க பொருளாதார காரணமும், அரசியல் காரணமும் உள்ளது. இவ்வாறான அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.