ஈழ தமிழ் பெண்ணுக்கு பிரித்தானியாவில் உயர் பதவி

229 0

பிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் வாண்ட்ஸ்வொர்த் கவுன்சிலின் துணை மேயராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மனித உரிமைகள் ஆர்வலரான சர்மிளா வரதராஜ் என்பவரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இவர், புளோரிடா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து மற்றும் சிலி ஆகிய நாடுகளில் நான்கு வெளிநாட்டுப் படிப்புகளை முடித்து, ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிகத்தில் வாலடிக்டோரியன் (உயர்ந்த தரவரிசை மாணவி) பட்டம் பெற்றுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு எதிராக செயற்படும் பிரித்தானிய தமிழர்கள் மன்றம் என்ற சட்டத்தரணிகள் அமைப்பிற்கு அவர் தன்னார்வத் தொண்டு செய்யத் தொடங்கியுள்ளார்.

 

 

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ள அவர், தன்னார்வ தொண்டு நிறுவனம், உலகளாவிய மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் 21 வயதில் இருந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் செய்தித் தொடர்பாளராக இருந்து வருகிறார்.

அவர் ஐக்கிய இராச்சிய அரசாங்கத்துடனான வழக்கமான ஈடுபாட்டின் மூலம் இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானங்களில் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery