பிரபல யூடியூபர் ரட்டா கைது

270 0

இலங்கையின் பிரபல யூடியூபர் ரதிது சுரம்யா என்ற ரட்டா என்பவர் இன்று கொம்பைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்ட விரோதமாக கூட்டம் சேர்த்தது உட்பட பல குற்றச்சாட்டுகளின் கீழ் ரட்டா கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாக்குமூலம் பதிவு செய்வதற்காக பொலிஸ் நிலையத்திற்கு வந்த ரட்டாவை கொம்பனித்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பில் காலி முகத்திடலில் 50 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகராக ரட்டா அறியப்படுகிறமை குறிப்பிடத்தக்கது