கோட்டா கோ கம தாக்குதல் – மஹிந்த உள்ளிட்ட 11 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு!

245 0

கடந்த 9ஆம் திகதி அலரிமாளிகைக்கு அருகாமையிலும் காலிமுகத்திடலுக்கு அருகாமையிலும் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (வியாழக்கிழமை) வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாக்குமூலங்களைப் பதிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களை அடையாளம் காண ஆறு அடையாள அணிவகுப்புகள் நடத்தப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் நான்கு அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டதாகவும் சம்பவம் தொடர்பில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் பலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.