சபுகஸ்கந்த குறித்து மகிழ்ச்சியான செய்தி!

247 0

நாளைய தினம் நாட்டிற்குள் கச்சா எண்ணெய் இறக்கப்பட்டதன் பின்னர் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் செயற்படவுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் வரை (26) இலங்கையின் எரிபொருள் இருப்பு தொடர்பில் அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார்.

39,968 மெட்ரிக் தொன் 92 ஒக்டேன் பெற்றோல் தற்போது கையிருப்பில் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் 7,112 மெட்ரிக் தொன் 95 ஒக்டேன் பெற்றோலும், 23,022 மெட்ரிக் தொன் டீசலும் , சூப்பர் டீசல் 2,588 மெட்ரிக் தொன்னும் மற்றும் விமான எரிபொருள் 3,578 மெட்ரிக் தொன்னும் கையிருப்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.