கிரிஷ் நிறுவன நிதிக் குற்ற விவகாரம் : நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

161 0

றக்பி விளையாட்டை மேம்மபடுத்த கிரிஷ் நிறுவனம் கொடுத்ததாக கூறப்படும் 70 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தினார் எனும் குற்றச் சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு  எதிர்வரும் செப்டம்பர் வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி இது குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொல்வதாக கோட்டை நீதிவான் திலின கமகே நேற்று (25  அறிவித்தார்.

இந்த விவகாரத்தில்,  சட்டமா அதிபரின் ஆலோசனைகளை கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம்  நேற்று மன்றுக்கு  அறிவித்த நிலையில் வழக்கு இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பில் நாமல் ராஜபக்ஷ நேற்று மன்றில் ஆஜராகியிருந்தார்.

கிரிஷ் குழுமத்திடம் பணம் பெற்று அதனை தவறாக பயன்படுத்திய விவகாரம் தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய இடம்பெறும் விசாரணைகளில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ  கடந்த 2017 ஜூலை 18 ஆம் திகதி பிணையில் விடுதலைச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.