கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியீடு

171 0

2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மீள் திருத்தப் பெறுபேறுகள் இன்று (25) வெளியாகியுள்ளதாகபரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

இதன்படி, www.donets.lk என்ற இணையத்தள பக்கத்தின் ஊடாகவும், /www.results.exams.gov.lk” www.results.exams.gov.lk என்ற இணையத்தள பக்கத்தின் ஊடாகவும் மீள் திருத்தப் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மீள் திருத்தப் பெறுபேறுகளுக்காக 32,528 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்,