வன்முறைகளில் ஈடுப்பட்ட தரப்பினருக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்பட வேண்டும் – நாமல்

134 0

வன்முறையான போராட்டத்தின் ஊடாக வெற்றிப்பெற முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டால் முழு அரச செயலொழுங்கும்,சட்டவொழுங்கும் பாதிக்கப்படும்.

பாராளுமன்ற உறுப்பினர்களிதும், பொது மக்களினதும் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
<p>வன்முறை சம்பவங்களில் ஈடுப்பட்ட தரப்பினருக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றில் (20) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் போது ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடந்த நாட்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய இரு தரப்பினர் உள்ளனர்.

ஆயுதங்களை கையிலேந்திய ஒரு தரப்பினர் வீடுகள் மீது குண்டு வீசி தாக்குதல்களை முன்னெடுத்துள்ளார்கள்.
இவர்கள் எக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அதனை கவனத்திற் கொள்ளாது உரிய சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும்.

போராட்டங்கள் ஊடாக பிறரை கொலை செய்து.வீடுகளுக்கு தீ வைத்து மகிழ்ச்சியடைய முடியுமாயின் முழு அரச செயnலொழுங்கும்,சட்டவொழுங்கும் வீழ்ச்சியடையும்.

திட்டமிட்ட போராட்டகாரர்கள் பின்னால் எதுவும் அறியாத நிலையில் சென்ற தரப்பினருக்கு புனர்வாழ்வளித்து அவர்களை சமூக மயப்படுத்த வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களினதும்,பொது மக்களினதம் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
பிரதிபொலிஸ் மா அதிபருரை கடுமையாக தாக்குபவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காவிடினும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்காவிடினும் சமூக கட்டமைப்பு முழுமையாக&nbsp; பாதிக்கப்படும்.

திட்டமிட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுப்பட்டவர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல் இருக்குமாயின் அதனை இங்கு குறிப்பிட்டுக்கொண்டிருக்காமல் உரிய தரப்பினரிம் குறிப்பிட்டால் விசாரணை நடவடிக்கைகளுக்கு அது சாதகமாக அமையும் என்றார்.