எரிபொருள் கோரி பல பகுதிகளில் மறியல் போராட்டம்

137 0

எரிபொருள் கோரி பொதுமக்களால் பல்வேறு பகுதிகளில் வீதி மறியல் போராட்டங்களில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, நாவல வீதி திறந்த பல்கலைக்கழகத்திற்கு அருகில் முற்றாக தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு – ஹொரணை வீதி (120 பஸ் பாதை) பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தடை செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன் காரணமாக சுற்றுவட்டார வீதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.