ஜனாதிபதி பதவி விலக இருக்கும் நிலையிலேயே ரணில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

162 0

மக்களின் எதிர்ப்பால் ஜனாதிபதி பதவி விலகவேண்டிய இக்கட்டான நிலையிலே ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) இரண்டாவது நாளாக இடம்பெற்ற கடந்த 9ஆம் திகதி கலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
<p>அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்க திறமையானவர். அனுபவமிக்கவர். அவரின் திறமையை மதிக்கின்றோம். ஆனால் மக்களின் கோரிக்கை என்ன?. கோட்டாபாய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கம் வீட்டுக்கு செல்லவேண்டும் என்றே தெரிவித்து வந்தனர்.

காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்ததால் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ வீட்டுக்கு செல்வதை தவிர வேறு வழியில்லாத நிலையிலே ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

அத்துடன் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு 13 வருடங்கள் ஆகின்றன. விடுதலைப்புலிகளின் தேவையை தமிழ் மக்கள் அன்றுவிட தற்போதுதான் அதிகம் உணர்கின்றனர்.

அரசாங்கத்தின் செயற்பாடே இதற்கு காரணமாகும். நாட்டில் இடம்பெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் எவரும் கவலைப்படுவதாக தெரிவதில்லை.

அரசாங்கத்தின் காலவலரான சிங்கள மக்கள் ஒருபடி இறங்கி வடக்கு மக்களுடன் கலந்துரையாட வேண்டும்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானால் மாற்றம் இடம்பெறும் இடம்பெறும் என தெரிவித்தார்கள். ஆனால் அவ்வாறான மாற்றம் ஏற்படப்போவதில்லை என்றே நாங்கள் தெரிவித்தோம்.

எனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொருளாதாரம் தொடர்பாக மாத்திரமல்லாது அரசியல் தீர்வு தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அரசாங்கம் தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவை இழந்திருக்கின்றது. முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தின் பின்னால் இருந்தனர். தற்போது எதிராக இருக்கின்றனர். இதேபோன்று தற்போது சிங்கள மக்களும் உங்களுக்கு எதிராக இருக்கின்றனர். அதனால் ஜனநாயக முறையில் செயற்பட முயற்சிக்கவேண்டும் என்றார்.