போரில் உயிர்நீத்தவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அஞ்சலி

219 0

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க  குமாரதுங்க தமது இல்லத்தில் விளக்கேற்றி அஞ்சலி செய்தியுள்ளார்.

முப்பது வருட இனப்படுகொலைப் போரில் நாம் இழந்தவை ஏராளம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் தளத்தில் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில்  இடம்பெற்ற கொடூர யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 13 வருடங்கள் ஆகின்றன. நாங்கள் சிங்களவர், தமிழ், முஸ்லிம் என பிரிந்துள்ளோம். அந்தப் போரினால் நான் ஒரு கண்ணை இழந்தேன். இன்னும் பல இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.

போரின் முடிவைக் கொண்டாடும் இந்த நேரத்தில் வெறுப்புக்குப் பதிலாக அன்பைக் காட்டுவோம். பழிவாங்குவதற்கு பதிலாக மன்னிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.