 நாளை (17) முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலை நடவடிக்கைகளும் வழமை போன்று ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளை (17) முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலை நடவடிக்கைகளும் வழமை போன்று ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் அண்மையில் நிலவிய அமைதியின்மை காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையால் பாடசாலைகள் இயங்குவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
பல தடவைகள் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதனால் பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று தொடர முடியாமல் போனதாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் லலித எகொடவில தெரிவித்தார்.
எவ்வாறாயினும் நாளை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டும் நிலையில் பாடசாலை நடவடிக்கைகளை வழமை போன்று பராமரித்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
 
                        

 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            