காத்திருக்கிறாள்!- அகரப்பாவலன்.

269 0

 

நந்திக் கடற்கரையில்
முள்ளிவாய்க்கால் நினைவுகளை
ஏந்திய தீபங்கள் ..

அங்கு ..

மூன்று மகன்களை
போருக்கு அனுப்பிய
தாயொருத்தி நந்திக்கடலை
பார்த்த வண்ணம் நிற்கிறாள் !

அவள் கண்களில்
இன்னும் நம்பிக்கையின்
ஆழம் தெரிகின்றது ..

ஆம் !

கடைசியாக
தன்னைப் பார்க்கவந்த
இளைய மகனிடம்
அண்ணன்மாரைப்பற்றி
தெரிந்து கொண்ட விடையங்கள்
அவள் நெஞ்சில் நிழலாடியது ..

அது போரின்

உக்கிரத்திற்கு முந்தையது ..

கடும் போரின் போது
குண்டுகளின் ஆட்சியே
வன்னியை ஆட்கொண்ட நேரம் ..
பசி ..பட்டினி ..நோய் ..

இவைகளுக்கு மத்தியில்
உயிர் காக்கும் ஓட்டம் ..
இனவெறிக் குண்டுகள்
இவளை இரையாக்கவில்லை ..
இவள் மாவீரரின் தாயாகிறாள்
என்பாதிலோ !

இனவெறி
நெருப்புக்குழம்பில்
நீந்திய தாயவள்
கண்களில் ஏக்கத்துடன்
நந்திக் கடற்கரையில் நிற்கிறாள் ..

பெற்றமனம் ..
தாய்மையின் பாசம் ..
ஏன் நிற்கிறாள் ?

அவள் கேள்விப்பட்ட ஒன்று!
நந்திக்கடலில்
ஆழ்ந்தவரும் உண்டு ..
எழுந்தவரும் உண்டு ..

ஆம் ..
அதற்காகத்தான்
“காத்திருக்கிறாள் ”
பல்லாயிரம் தமிழீழத் தாய்மார்கள்
நம்பிக்கை தளராமல்
காத்திருக்கின்றனர் ..

அது தாயுள்ளத்தின் நம்பிக்கை !
“இனவெறியின் ” நிஜம்
எது ??????.
-அகரப்பாவலன்-