யேர்மனி லன்டோவ் தமிழாலயத்தில் மே 18 நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு.

385 0

சிறிலங்கா அரசினது அதியுச்ச இன அழிப்பு நாளான மே18ஐ உலகெங்கும் வாழும் தமிழர்கள் நினைவேந்தி வருவதோடு அனைத்துலகிடம் நீதிகேட்டுப் போராடியும் வருகின்றார்கள். இவ்வாரமானது அந்த நினைவுகூரல் வாரமாகையால் யேர்மனியிலுள்ள தமிழாலயங்களும் அந்த நினைவுகூரலை பல்வகைகளில் கடைப்பிடித்து வருகின்றன.

2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இறுதி நாட்களில் உணவற்ற சூழலில் உப்பற்ற கஞ்சியே உணவாக இருந்தது. அதனை எமது அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதோடு அந்த நினைவுகளைப் பேணுவதும் அவசியமாகும் என்ற அடிப்படையில் லண்டவ் தமிழாலயமும் தனது மாணவர்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி  வழங்கியதோடு 2009ற்குப் பின் புலத்திலே பிறந்த மாணவர்களால் முள்ளிவாய்க்கால் பேரவலம் குறித்த கருத்துப் பகிர்வும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.