ஆர்ப்பாட்டக்காரர்கள் இருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு

34 0

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகள் இருவரை அழைப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

கடந்த 9 ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற கலவரத்தில் சட்டத்தை நிலைநாட்டத் தவறியமை தொடர்பில் ஆராய்வதற்காக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று (13) ஆணைக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தார்.

தொடர் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கமளித்ததாக மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

காலி முகத்திடலில் இடம்பெற்றுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகள் இருவரை அழைத்து வெளிப்படுத்திய விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.