சத்தீஸ்கர் மாநிலத்தில் ஹெலிகாப்டர் விபத்து- இரண்டு விமானிகள் உயிரிழப்பு

189 0

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சத்தீஸ்கர் அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநில அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையம் அருகே நேற்றிரவு விபத்துக்குள்ளானது.
கீழே விழுந்து நொருங்கிய அந்த ஹெலிகாப்டரில் இருந்த விமானிகள் கிருஷ்ண பாண்டா, ஏபி ஸ்ரீவஸ்தவா ஆகோயர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலன் இன்றி இருவரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து  தமது டுவிட்டர் பதிவில் வேதனை தெரிவித்துள்ள சத்தீஸ்கர் முதலமைச்சர் ர் பூபேஷ் பாகேல், உயிரிழந்த விமானிகள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன்,  உடனடியாக நிவாரண வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஹெலிகாப்டர் விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ள நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக
ஹெலிகாப்டர் விபத்தை சந்தித்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.