பிரதமர் பதவிக்கான பெயர்கள் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை

248 0

பிரதமர் பதவிக்கான பெயர்கள் இதுவரை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவிக்கு பொருத்தமான பல பெயர்கள் கடந்த 11 ஆம் திகதி பரிந்துரைக்கப்பட்டதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் 11 சுயேச்சைக் கட்சிகளின் கூட்டத்தில் இந்த முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.