நான்கு பக்கமும் மரணம் சூழ்ந்த போதும் தாயகம் பிரியேன் என்ற தலைவர் பிரபாகரனின் பேராண்மை எங்கே என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் ருவிட்டரில் பதிவிடுகையில்:
நான்கு பக்கம்
மரணம் சூழ்ந்தபோதும்
‘தாயகம் பிரியேன்
தாய்மண்ணில் மரிப்பேன்’ என்ற
பிரபாகரத் தமிழனின் பேராண்மை எங்கே…
ஊர் கொந்தளித்த
ஒரே மாதத்தில்
நாடு கடக்கத் துடிக்கும்
ராஜபக்ச எங்கே…

