முன்னாள் போராளி கொலை!

327 0

வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் மெய்யப்பன் என அழைக்கப்படும் தாசன் சிவஞானம் (42) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் வீட்டிற்கு அண்மையில் உள்ள காணி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த புதைகுழி ஒன்றை அவதானித்த மக்கள் மருதங்கேணி  பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, இன்று குறித்த புதைகுழி நீதவான் முன்னிலையில் தோண்டப்பட்ட போது பெற்சீற்ரால் சுற்றப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டது.