யேர்மனி ஒபகவுசன் மற்றும் காகன் நகரமத்தியில் இடம்பெற்ற கவனயீர்பு நிகழ்வுகள்.

257 0

சிறிலங்கா சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பினை இ வேற்றின மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் யேர்மனியில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

மே4 ஆம்திகதியிலிருந்து மே17 திகதி வரை தொடர்ச்சியாக 14 நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக 9.5.2022
ஒபகவுசன் நகர மத்தியில் ,10.5.2022 காகன் நகர மத்தியில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

தமிழின அழிப்பின் அவலத்தைக் கண்முன் காணும் ஓவியக் காட்சிப்படுத்தல்கள் பார்ப்பவர் மனங்களை மிகவும் பாதித்திருந்தன. இதேவேளை மனிதநேயச் செயற்பாட்டாளர்களும்இ இளையவர்களும் இணைந்து துண்டுப்பிரசுரங்களை வழங்கி தமிழின அழிப்பின் வலியினை வேற்றின மக்களுக்கு எடுத்து விளக்கினர்.