ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு இன்று இரவு விசேட உரை

287 0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப்பரிவு தெரிவித்தள்ளது.

தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதியின் இன்றைய உரையில் முக்கிய தீர்மானங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றும் முதலாவது உரை இது என்பதோடு குறித்த உரை அனைத்து தொலைக்காட்சி சேவைகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்படுடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.