இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் நாசகார சக்திகள்!

406 0

நீதி மற்றும் ஜனநாயக ஆட்சிக்காக மிகவும் அமைதியான போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இராணுவ ஆட்சிக்கு வழிவகுத்து விடவேண்டாம் என அனைத்து பிரஜைகளிடமும் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

நீதி மற்றும் ஜனநாயக ஆட்சிக்கான அற்புதமான போராட்டத்தை நடத்தி வரும் அனைத்து பிரஜைகளிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இராணுவ ஆட்சிக்கு வழி வகுப்பதற்காக நாசகார சக்திகள் வன்முறையை தூண்டுவதற்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த ஆபத்தை தடுப்பதற்காக மக்கள் உங்களது ஒருங்கிணைப்பு திறனை பயன்படுத்துங்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளார்.