வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள மடுகந்தை பகுதியில் மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மடுகந்தைப் பகுதியைச் சேர்ந்த மக்களால் நேற்று மாலை 5.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அவசரக்கால சட்டம் மற்றும் ஊரடங்கு உத்தரவையும் மீறி வவுனியா, மடுகந்தைப் பகுதியில் ஒன்று கூடிய மக்கள் அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறும், கொலைகார அரசே வீட்டுக்கு போ எனத் தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், திடீரென வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதியையும் மறித்துள்ளனர்.
இதன் காரணமாகக் குறித்த வீதி ஊடான போக்குவரத்து சுமார் 30 நிமிடங்கள் வரை பாதிப்படைந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


