மோதல்கள் தொடர இடமளித்தால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் – ரணில் எச்சரிக்கை

305 0

அமைதியான முறையில் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினை பாதுகாத்திருக்க வேண்டியது முழு நாட்டினதும் பொறுப்பாகும்.

>இன்றைய தினம் இடம்பெற்ற சம்பவத்தில் அனைவரும் தவறை ஏற்றுக் கொள்ள வேண்டும். மோதல்கள் தொடர்வதற்கு இடமளித்தால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசேட அறிவிப்பினை விடுத்துள்ள விசேட அறிவிப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த விசேட அறிவிப்பில் முன்னாள் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட ‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இளைஞர்கள் மிகவும் ஜயநாயக ரீதியில் முன்னெடுத்து வந்த இந்த போராட்டத்தை பாதுகாத்திருக்க வேண்டியது முழு நாட்டினதும் பொறுப்பாகும்.

இதனை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். உண்மையில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இதனை விடவும் பலத்த ஆதரவு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் தான் குறித்த போராட்டம் தீவிரமடையவில்லை.

தவறை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாட்டில் அமைதியற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலகினால் மாத்திரம் போதாது.

இந்த மோதல்கள் தொடர்ந்தும் தீவிரமடைந்தால் பொருளாதார நெருக்கடிகள் மேலும் அதிரகரிக்கும். மோதல்களை தொடர்ச் செய்து எமக்குள் முரண்பட்டுக் கொண்டால் அதன் விளைவுகளையும் நாமே எதிர்கொள்ள நேரிடும். தவறிழைத்து அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

எம்மால் பழைய முறையில் அரசியல் செய்ய முடியாது என்பதை சகல அரசியல்வாதிகளிடமும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆளுந்தரப்பு மற்றும் எதிர்தரப்பு என்பன கட்சி பேதத்தினை புறந்தள்ளி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் மாற்றமடைவதற்கு எமக்கு பலம் இருக்க வேண்டும்.

கட்சி பேதமற்ற சிறு அரசாங்கமொன்று காணப்பட வேண்டும். முழு பாராளுமன்றமும் நிதி மற்றும் நிர்வாக அதிகாரத்தைப் பெற்று அமைச்சரவையுடன் இணைந்து செயற்பட வேண்டும்.

எவரேனும் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்படுவார்களாயின் , அதனை விட சிறந்தது பாராளுமன்றத்தை மூடி வைப்பதாகும். அத்தோடு குழுக்கள் மற்றும் நிறுவனங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
இந்த பொறுப்பிலிருந்து எம்மால் விலக முடியாது. இந்த பயணத்தில் எம்மால் நாட்டை கட்டியெழுப்ப முடியும். பொருளாதாரம் எந்தளவிற்கு வீழ்ச்சியடைந்தாலும் அதனை எம்மால் மீட்க முடியும்.

மக்கள் வாழக்கூடிய வழியை ஏற்படுத்த வேண்டும். நாம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். இளைஞர்களுக்கு எதிர்காலத்தை வழங்க வேண்டும். பழைய முறைமையை நீக்கி , இளைஞர்களை உள்ளடக்கிய புதிய அரசியல் மற்றும் பொருளாதார பிரவேசத்திற்குச் செல்ல வேண்டும். அதற்கு அனைவரும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்றார்.