“அமைதியான போராட்டத்தை அடக்குமுறை சட்டங்கள் கொண்டு ஒடுக்க முடியாது”

69 0
மக்களின் அமைதியான போராட்டத்தை அடக்குமுறை சட்டங்கள் கொண்டு ஒடுக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் புரிந்துகொள்ள வேண்டும் என அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவசரகால சட்டம் பிரகடனம் செய்யப்பட்டமை தொடர்பாக கண்டனம் வெளியிட்டு தனது டுவிட்டரில் பதிவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.