லாண்டோ மற்றும் கால்றூவ நகரமத்தியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள்.

398 0

சிறிலங்கா இனவாத அரசின் தமிழின அழிப்பின் உச்ச மாதமாக மே மாதம் 2009 ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் அழிக்கமுடியாத பதிவாக இருக்கின்றது.
அதைப் பல்லின மக்களுக்கு வெளிப்படுத்தும் முகமாக யேர்மனியின் பல நகரங்களில் மே 4 ஆம் திகதியிலிருந்து கண்காட்சிகளும் துண்டுபிரசுரப் பிரச்சாரமும் நடந்து வருகின்றது.

அந்த வகையில் 4.5.2022 லாண்டோ நகரத்திலும் 5.5.2022 கால்றூய நகரத்திலும் அந் நகரங்களில் வாழும் தமிழ்மக்கலால் முன்னெடுக்கப்பட்டது. இரு நகரங்களின் நகரமத்தியிலும் காண்காட்சிகள் வைக்கப்பட்டு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழீழ மக்களுக்கு சுடர்வணக்கம், மலர் வணக்கம் செலுத்தி நினைவுகூரப்பட்டது.