காணாமல் ஆக்கப்பட்ட தனது உறவுகளைத்தேடி மரணமடைந்த தாய்க்கு வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரைத் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக அண்மையில் மரணமடைந்தார்.
வவுனியா – கிறிஸ்தவகுளம் பகுதியைச் சேர்ந்த செல்லையா செல்வராணி (வயது 75) என்ற தாயே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
அவருக்கு வவுனியாவில் தொடர்ச்சியாகப் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது அவரது படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.


