யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் நிகழ்வு

191 0

முஸ்லிம்களின் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை யாழ் மர்யம் ஜும்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இன்று (03) காலை 6.45 மணி அளவில் நபிவழியில் நம் தொழுகை எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி ஜின்னா மைதானத்தில் வழமை போன்று இடம்பெற்றது.

நோன்புப் பெருநாள் தொழுகை மற்றும் பெருநாள் குத்பா பிரசங்கம் என்பன மௌலவி எம்.ஏ. பைசரினால் (மதனி) நிகழ்த்தப்பட்டது.

இன்றைய பெருநாள் திடல் தொழுகையில் யாழ். வாழ் முஸ்லிம்கள், தாய்மார்கள், இளைஞர்கள், யுவதிகள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.