தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்விப் பொறுப்பாளர், திரு இராஐ மனோகரன் அவர்களுக்கு 30 ஆண்டுகாலப் பணிக்காக மதிப்பளிப்பு.

780 0

தமிழ்க் கல்விக்கழகம் யேர்மனியின் கல்வி மற்றும் தமிழ்த்திறன் ஆகியவற்றின் பொறுப்பாளர் திரு இராஐ மனோகரன் அவர்களுக்கு 30.4.2022 அன்று ஸ்ருட்காட் நகரில் நடைபெற்ற தமிழ்க்கல்விக் கழகத்தின் 32 ஆவது அகவை நிறைவு விழாவின் போது சிறப்பாக மதிப்பளிக்கப்பட்டது.

யேர்மனியத் தமிழச் சிறார்களின் தமிழ்க் கல்விக்காக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன் அவர்களின் தூரநோக்குச் சிந்தனையின் வெளிப்பாடாக உலகத்தமிழர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு, காலத்தின் தேவைகருதி தமிழ்க் கல்விக் கழகமாகப் பெயர் மாற்றமடைந்தது அனைவரும் அறிந்ததே. உலகத்தமிழர் இயக்கத்தின் ஆரம்பப் பள்ளிகளில் ஒன்றான முல்லாக்கர் தமிழாலயத்தின் நிர்வாகியாக பணியாற்றிய திரு இராஐ மனோகரன் அவர்கள் பின் அந் நிறுவனத்தின் கல்வி மற்றும் தமிழ்த்திறன் ஆகிய பொறுப்புக்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் 30 வருடகாலத் தமிழ்ப்பணிக்காக தமிழ்க் கல்விக்கழகத்தின் முத்திரை பதித்த பதக்கத்தினை, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனியக் கிளையின் பொறுப்பாளர் திரு யோ.சிறிரவிந்திரநாதன் அவர்கள் அணிவித்து மதிப்பளித்தார்.